திருவிடைமருதூர் கோவிலில் சசிகலா சுவாமி தரிசனம்

திருவிடைமருதூர் கோவிலில் சசிகலா சுவாமி தரிசனம்
X

சென்னையில் இருந்து திடீரென தஞ்சாவூர் வந்துள்ள சசிகலா, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் ரேவதி நட்சத்திர லிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

அரசியலில் இருந்து விலகியுள்ள சசிகலா, நேற்று நள்ளிரவு தஞ்சாவூருக்கு வந்தார். தஞ்சாவூர் அருளானந்தநகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கிய சசிகலா, இன்று காலை தனது கணவரின் சொந்த ஊரான விளாருக்குச் சென்றார். திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் ரேவதி நட்சத்திர லிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

முன்னதாக மகாலிங்கசுவாமி கோயிலுக்கு வருகை தந்த சசிகலாவுக்கு, கோயில் நிர்வாகத்தினர் வரவேற்பளித்தனர். விநாயகரை வழிபட்டு பின்னர் கோயிலுக்குள் வந்த சசிகலா, 27நட்சத்திர லிங்க சன்னதிக்குள் சென்று ரேவதி நட்சத்திர லிங்கத்துக்கு சிறப்பு ஹோமத்துடன் பூஜை செய்து வழிபட்டார். சுமார் 1 மணி நேரம் சுவாமி தரிசனம் செய்த சசிகலா, பின்னர் கோயிலுக்கு வெளியே வந்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் குடைகளையும் வழங்கினார். அவரிடம் செய்தியாளர்கள் பேச முயன்றபோது, கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய மட்டுமே வந்தேன் என கூறிவிட்டு, காரில் ஏறிச் சென்றார்.

வரும் 20-ம் தேதி நடராஜனின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் , விளாரில் உள்ள அவரது சமாதியில் நடைபெறவுள்ளது. சசிகலா இதில் கலந்து கொண்ட பின் சென்னை திரும்ப உள்ளார்.தஞ்சாவூரில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும் சசிகலா, பல்வேறு கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்யவும், பல அரசியல் பிரமுகர்களைத் தனிப்பட்ட முறையில் சந்திக்க உள்ளதாக சசிகலாவின் உறவினர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!