துணைத்தலைவர் போட்டியில் திமுக வெற்றியை எதிர்த்து வி.சிகவினர் மறியல்: வேப்பத்தூரில் பரபரப்பு

துணைத்தலைவர் போட்டியில் திமுக வெற்றியை எதிர்த்து வி.சிகவினர் மறியல்: வேப்பத்தூரில் பரபரப்பு
X

வேப்பத்தூரில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துணைத்தலைவர் தேர்தலில் திமுக போட்டியிட்டு வெற்றி பெற்றதால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

வேப்பத்தூரில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துணைத்தலைவர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதால் வி.சிகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் வேப்பத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் பதவிக்கு திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தை கட்சிக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் காமராஜ் என்பவர் போட்டியிட்டார். ஆனால் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த சுதாராமச்சந்திரன் என்பவர் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வழங்கப்பட்ட இடத்தில் திமுக போட்டியிட்டு வெற்றி பெற்றதால் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வெண்மணி தலைமையில் வேப்பத்தூர் பெரியார் சிலை முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!