திருவையாறு வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 2.57 ஏக்கர் நிலம் மீட்பு

திருவையாறு வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 2.57 ஏக்கர் நிலம் மீட்பு
X

திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 2.57 ஏக்கர் நிலம்  மீட்கப்பட்டது

திருவையாறு அருகே திருவேதிகுடி வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 2.57 ஏக்கர் நிலம் குத்தகைதாரரிடமிருந்து மீட்கப்பட்டது

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த திருவேதிகுடியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான வேதபுரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நஞ்சை நிலம் சுமார் 2 ஏக்கர் 57 செண்ட் குத்தகை தாரர்கள் குத்தகை செலுத்தாமல் இருந்து வந்தனர். இதனால் கோவில் நிர்வாகம் தஞ்சை வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கில் குத்தகை தாரர்கள் கோவிலுக்கு எந்த தொகையும் செலுத்தாத காரணத்தினால் வருவாய் நீதிமன்றம் கோவில் நிலத்தை குத்தகை தாரர்களிடமிருந்து மீட்டு கோவிலிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

அந்த தீர்ப்பின்படி, இந்து அறநிலைத்துறை தஞ்சை உதவி கமிஷனர் சிவராம்குமார், தஞ்சை ஆய்வாளர் கீதாபாய், திருவையாறு ஆய்வாளர் குணசுந்தரி, செயல் அலுவலர் பிருந்தாதேவி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் முன்னிலையில், 2 ஏக்கர் 57 செண்ட் நிலத்தை கையகப்படுத்தி, கோவில் வசம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!