தஞ்சாவூர்: புதுப்பொழிவுடன் வெள்ளத்தை வரவேற்க காத்திருக்கும் கல்லணை!
புதுப்பொலிவுடன் தோற்றமளிக்கும் கல்லணை.
டெல்டா குறுவை சாகுபடிக்கு சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது .மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர், ஜூன் 16 ம் தேதி இரவு தஞ்சை மாவட்டம், கல்லணையை வந்தடையும். 17 ம் தேதி, டெல்டா மாவட்ட பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொளளிடம் ஆற்றின் 116 ஷட்டர்களும் சீரமைக்கப்பட்டுள்ளன. 'கிரீஸ்' வைத்து முறையாக செயல்படுகிறதா என்பதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
புது வெள்ளத்தை வரவேற்கும் விதமாக, கரிகால சோழன், காவிரி அன்னை, ராஜராஜ சோழன், அகத்தியர், விவசாயி சிலைகளுக்கு, வர்ணம் பூசும் பணிகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன. கல்லணையில் குவிந்து கிடக்கும் மணல் திட்டுகளையும் சீர்செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் சாகுபடி பணிகளை துவங்கியுள்ளனர். அத்துடன் கல்லணை திறக்கப்படுவதற்குள்ளாக, துார்வாரும் பணியை முடித்து கடைமடைவரை தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu