உலக நன்மை கருதி பாதயாத்திரை - குழுவினருக்கு கபிஸ்தலத்தில் வரவேற்பு
பாத யாத்திரை குழுவினருக்கு வரவேற்பு அளித்த பக்தர்கள்.
தஞ்சை மாவட்டம், சுவாமிமலை அடுத்துள்ள திருவலஞ்சுழி அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ கோபால கிருஷ்ணன் சுவாமிகள், உலக நன்மை கருதி 29-ம் ஆண்டு பாத யாத்திரை மேற்கொண்டார். இதனை முன்னிட்டு கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் மகா அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மகா கணபதி ஹோமம், சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் தொடர்ந்து மஞ்சள் அலங்காரம், லட்சுமி அலங்காரம், சரஸ்வதி அலங்காரம், காமாட்சி அலங்காரம், குங்கும அலங்காரம், போன்ற பல்வேறு அலங்காரங்கள் நிகழ்ச்சியும் 24ஆம் தேதி புஷ்ப அலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்றன.
தொடர்ந்து, கடந்த 3ஆம் தேதி இரவு மகா அபிஷேகம், குத்து விளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மாலை அணிவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த 17ஆம் தேதி சுவாமிகள் பாதயாத்திரை பக்தர்களுக்கு பாத பூஜை செய்தல், அன்னதான நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து புஷ்ப அலங்காரம் நிகழ்ச்சியும், பாதையாத்திரை புறப்பாடு, சக்தி குடம் எடுத்தல் நிகழ்ச்சி கோபாலகிருஷ்ண சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
திருவலஞ்சுழி, சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம் வழியாக திருவையாறு, தில்லைஸ்தானம், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு செல்ல இருக்கின்ற சக்தி கரகத்திற்கு, கபிஸ்தலத்தில் ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சந்தானகிருஷ்ணன் குடும்பத்தினர் மற்றும் கமலவல்லி முருகேசன், கோவிந்தராஜ், ரவி, ஆகியோர் வரவேற்பு வழங்கி பாதயாத்திரை செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு கோபால கிருஷ்ணன் சுவாமிகள் அருள் பாலித்து பிரசாதம் வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu