தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்து தொழிலாளி பலி

தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்து  தொழிலாளி பலி
X
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே, தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலியானார்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகிலுள்ள தளிகைவிடுதியைச் சோ்ந்தவா் வி. சந்தானம் (55). இவா் திருவையாறு அருகே கீழத்திருப்பூந்துருத்தியில் தங்கி, தென்னை மரம் ஏறும் தொழிலாளியாக இருந்து வந்தாா்.

இவா் வெள்ளிக்கிழமை கீழத்திருப்பூந்துருத்தியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறினாா். அப்போது, தவறி கீழே விழுந்த சந்தானம் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டனா்.

Tags

Next Story
ai healthcare technology