உலக மருந்தகமாக இந்தியா திகழ்கிறது-ஜே.பி.நட்டா

உலக மருந்தகமாக இந்தியா திகழ்கிறது-ஜே.பி.நட்டா
X

72 நாடுகளுக்கு கொரோனா தடுப்பு ஊசிகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் உலக மருந்தகமாக இந்தியா திகழ்வதாக தஞ்சாவூரில் ஜே.பி.நட்டா பேசினார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதி பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து, பூதலூரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, விகே சிங் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் பேசிய நட்டா,திமுக, காங்கிரஸ் கட்சிகள் இரண்டு தலைமுறை, மூன்று தலைமுறை, நான்கு தலைமுறை ஊழல் என கொண்டுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் மீனவர்கள் மீதான தாக்குதல் குறைந்துள்ளது.

அதிமுகவின் திட்டங்களை இந்திய அளவில் பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். அதிமுக பாஜக அரசு இணைந்து செயல்படுவதினால் உலகையே அச்சுறுத்திய கொரோனா தொற்று தமிழகத்தில் பெருமளவு குறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த இரண்டு தடுப்பூசிகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 72 நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து உலகத்தின் மருந்தகமாக இந்தியா மாறியுள்ளது. தமிழகத்தில் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் பாஜக வேட்பாளரை ஆதரித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார்.

Tags

Next Story
ai solutions for small business