பொது சிவில் சட்டம் தேவை: இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா தீர்மானம்

பொது சிவில் சட்டம் தேவை:  இந்து மக்கள் கட்சி,  அனுமன் சேனா தீர்மானம்
X

திருமண்டங்குடி இராமானுஜர் இல்லத்தில்,  இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி இராமானுஜர் இல்லத்தில், இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பின் ஆலோசனை கூட்டம், பூசாரி பேரவை மாவட்ட தலைவர் கார்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். தஞ்சை மண்டல அமைப்பாளர் வேல்முருகன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாநில பொதுச்செயலாளர் பாலா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும், பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்கள் மீது தமிழக காவல்துறை பொய் வழக்குப் போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தீர்மானங்க நிறைவேற்றப்பட்டன.

அத்துடன், மோசமடைந்த கிராமத்தார் சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும், வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் இழப்பை கொச்சைப்படுத்தும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை அரசு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture