மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கலாம், அடிமையாக இருக்கக்கூடாது: முத்தரசன்

மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கலாம்,  அடிமையாக இருக்கக்கூடாது: முத்தரசன்
X
மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருப்பது தவறு இல்லை, ஆனால் அடிமையாக இருக்கக் கூடாது என தஞ்சையில் முத்தரசன் பரப்புரை.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துரை.சந்திரசேகரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செங்கிப்பட்டியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் முதலமைச்சர் பல்வேறு கூட்டங்களில் மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருந்தால் மட்டுமே நலத்திட்டங்களை பெறமுடியும் என பேசி வருகிறார். அது வினோதமாக இருகிறது. மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருப்பது ஒன்றும் தவறில்லை, ஆனால் அடிமையாக இருக்கக் கூடாது என அவர் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் இனிமேல் புதிய மாவட்டம் உருவாக்கப்படாது என சட்டமன்றத்தில் தெரிவித்த பழனிச்சாமி, தற்போது பழனி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என கூறுவது முரணாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!