திருவையாறு எம்.எல்.ஏ மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று

திருவையாறு எம்.எல்.ஏ மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று
X

துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. 

திருவையாறு எம்.எல்.ஏ சந்திரசேகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை திமுக உறுப்பினா் துரை. சந்திசேகரனுக்கு (62). இவருக்கு அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது அண்மையில் தெரியவந்தது.

இதேபோல, அவரது மனைவி, மகன், மகள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர்கலுக்கும் கொரொனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து 4 பேரும் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Tags

Next Story
ai powered agriculture