பாஜக தேர்தல் அறிக்கையால் தமிழகத்திற்கு நன்மை- சிடி ரவி

பாஜக தேர்தல் அறிக்கையால் தமிழகத்திற்கு நன்மை- சிடி ரவி

பாஜகவின் தேர்தல் அறிக்கையால் தமிழகத்திற்கு மிகப்பெரிய நன்மை ஏற்படும் என தஞ்சையில் சிடி ரவி தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, செங்கிப்பட்டியில் பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து, தமிழக பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சிடி ரவி புதுக்குடி, செங்கிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் பாஜகவின் தேர்தல் அறிக்கை தமிழகத்திற்கு மிகப்பெரிய நன்மையை ஏற்படுத்தும் என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்படும் என்பது போன்ற நல்ல திட்டங்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Tags

Next Story