திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் வருடாபிஷேகம்
திருவையாறு அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவில்
தருமையாதீனத்திற்கு சொந்தமான திருவையாறு அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவில் 9-ம் ஆண்டு சம்வத்ராபிஷேகம் எனும் கும்பாபிஷேக நாள் விழா நடைப்பெற்றது.
இதனை முன்னிட்டு காலை ஆதி வினாயகர், சண்டிகேஷ்வரர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம், தொடர்ந்து ஓலமிட்ட வினாயகருக்கு வெள்ளிக் கவசம் சாற்றியும், ஆட்கொண்டாருக்கு வடைமாலை சாற்றியும் சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து திருமுறை இன்னிசை, மகா ருத்ர ஹோமம் நடந்தது. பின்னர், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், சுவாமிக்கு பஞ்சமுக அர்ச்சனை, அம்பாளுக்கு நவசக்தி அர்ச்சனையும் நடந்தது.
மாலை 4 மணியளவில் நாதஸ்வர வித்வான்களின் மங்கள இசையும், காஞ்சி காமகோடி மடம் வீணை வித்வான் சுவாமிநாதன் குழுவினரின் வீணை இசையும், திருவையாறு அபிநயாஸ் கலைக் குழுமத்தினரின் பரத நாட்டியமும் நடைப்பெற்றது. இரவு 21 தவில் மற்றும் நாதஸ்வர மல்லாரியுடன் சிவகண வாத்தியங்களின் இசை முழக்கத்துடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu