வாகன சோதனையில் 1,01520 ரூபாய் பறிமுதல்

வாகன சோதனையில் 1,01520 ரூபாய் பறிமுதல்
X
உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட 1,01520 ரூபாய் பறிமுதல்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் 9 சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு, வரும் வாகனங்களில் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தேர்தல் நிலைக்குழு மற்றும் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் கஜேந்திரன் தலைமையில், திருக்காட்டுப்பள்ளி - கல்லணை சாலையில் வாகன சோதனை செய்த போது திருக்காட்டுப் பள்ளியில் இருந்து கல்லணை நோக்கி இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட 1,01520 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் பூதலூர் ஆவாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த துரைராசு மகன் ராஜாராமன் என்பதும் தெரியவந்துள்ளது. ஆனால் அவரிடம் பணத்திற்கான உரிய ஆவணம் இல்லாததால், பணம் பறிமுதல் செய்யப்பட்டு திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியனிடம் ஒப்படைத்து கருவூலத்தில் வைக்கப்பட்டது.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare