பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி

பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி
X

திருவையாறில் 500க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஒரே நேரத்தில், ஒரே ராகத்தில் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் 174 வது ஆராதனை விழா தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் அமைந்துள்ள அவரது சமாதியில் நேற்று தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவானது, கொரோனா தொற்று காரணமாக இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்ன கீர்த்தனை நடைபெற்றது.

இதில் தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை 500க்கும் மேற்பட்ட பிரபல கர்நாடக இசைக்கலைஞர்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில், ஒரே ராகத்தில் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். இந்த விழாவில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் மஹதி, சுதா ரகுநாதன், ரமணி,அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தியாகராஜ ஆராதனை விழாவினை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டு தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!