மதுக்கூர் வட்டார பகுதிகளில் வேளாண் இணை இயக்குனர் திடீர் ஆய்வு
விவசாயிகளிடம் நேரடியாக பேசி விவசாயிகளுக்கு வயல் அளவில் ஏற்படும் தேவைகள் மற்றும் காணப்படும் இடர்பாடுகள் குறித்து தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் நல்லதம்பி கேட்டறிந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு ஆயிரம் எக்டேர் இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வேளாண் துறை மூலம் வழங்க வேண்டிய குறுகிய கால நெல் ரகங்கள் ஆன கோ 51 மற்றும் டி பி எஸ் 5 ஆதார விதைகள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு தேவையான நெல் நுண்ணூட்டம் அசோஸ்பைரில்லம் பாஸ்போர் பாக்டீரியா போன்ற உயிர்உரங்களும் மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள நான்கு வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு நெல் விதைகள் விதை கிராமத் திட்டத்தின் கீழ் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் உயிர் உரங்களும் 50 சத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மதுக்கூரில் உள்ள 10 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் 11 தனியார் உர விற்பனை மையங்களிலும் வேளாண் இணை இயக்குனர் தஞ்சாவூர் அவர்களின் அறிவுரைப்படி சிறப்பு கண்காணிப்பு குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு உரயிருப்பு மற்றும் விற்பனை குறித்த கள நிலவரங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று, மதுக்கூர் வட்டாரத்தில் குறுவை சாகுபடி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாயிகளின் வயல்களில் விவசாயிகளிடம் நேரடியாக பேசி விவசாயிகளுக்கு வயல் அளவில் ஏற்படும் தேவைகள் மற்றும் காணப்படும் இடர்பாடுகள் குறித்து தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து கீழக்குறிச்சி கிராமத்தில் விவசாயிஅற்புதம் வயலில் ஏ எஸ் டி 16 நெல் நாற்றங்காலை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் காலத்தே கிடைக்கிறதா மற்றும் விவசாயிகளுக்கு வாய்க்கால்களில் தட்டுப்பாடு இன்றி நீர்வரத்து உள்ளது போன்றவைகள் பற்றியும் கேட்டறிந்தார்.
மண்டலக் கோட்டையை சேர்ந்த மற்றொரு விவசாயி விவசாய பணியாளர்கள் தட்டுப்பாட்டினால் தற்போது நேரடி விதைப்பு செய்வது பற்றியும், அதனால் நீர் தேவை உர செலவு குறைவுபற்றியும், விதைப்பு செய்த 11 நாட்களுக்குள் செய்யும் களை கட்டுப்பாட்டினால் ஏற்படும் நன்மைகள் நன்மைகள் பற்றியும், நடவு செய்வதை விட கூடுதலாக மகசூல் கிடைப்பது போன்றவை பற்றி வேளாண் இணை இயக்குனரிடம் தனது கருத்துக்களை தெரிவித்தார்.
வேளாண் துணை இயக்குனர் மாநில திட்டம் சுஜாதா, குறுவை தொகுப்பு திட்டத்திற்கு தேவையான யூரியா, டிஏபி மற்றும் பொட்டாஸ் போன்ற உரங்கள் தேவையான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது பற்றி மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனரிடம் கேட்டறிந்தார்.
ஆய்விற்கான ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி மற்றும் உதவி விதை அலுவலர் இளங்கோ ஆகியோர் செய்திருந்தனர். தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர், ஒரு ஏக்கருக்கு குறுவை தொகுப்பு திட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் உரம் வழங்கப்படுவது குறித்தும் உரிய ஆவணங்கள் மற்றும் வேளாண் உதவி அலுவலர் பரிந்துரையுடன் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகவேண்டுமாய் கேட்டுக் கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu