தஞ்சையில் கனரக வாகனம் மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

தஞ்சையில் கனரக வாகனம்  மீது பைக் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
X
தஞ்சை- நாகை சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற கனரக வாகனம் திடீரென பிரேக் பிடித்து நின்றபோது விபத்து நேரிட்டது

தஞ்சையில் முன்னால் சென்ற கனரக வாகனம் திடீரென்று பிரேக் போட்டதால் பின்தொடர்ந்து சென்ற மோட்டார் பைக் மோதிய விபத்தில் அதில் சென்ற இளைஞர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

தஞ்சை மாரியம்மன் கோவில் கிழக்கு தெருவை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி ருஷ்யா (50). இவர்களின் மகன் பிரசாந்த் (30). சம்பவத்தன்று பிரசாந்த் தஞ்சை- நாகை சாலை காட்டுதோட்டம் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற கனரக வாகனம் ஒன்று திடீரென பிரேக் பிடித்து நின்றது.

அதை எதிர்பார்க்காத இளைஞர் பிரசாந்தின் பைக் அந்த வாகனம் மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பிரசாந்த் பலியானார். இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!