தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் கடை கேட்டு திருநங்கைகள் போராட்டம்

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் கடை கேட்டு திருநங்கைகள் போராட்டம்
X
தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் கடைகள் கேட்டு திருநங்கைகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் பதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை கேட்டு திருநங்கைகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பேருந்துநிலையம், திருவையாறு பேருந்து நிலைய வணிக வளாகத்தினை தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்நிலையில் திறப்பு விழாவின் போது திருநங்கைகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1,289 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தஞ்சை பழைய பேருந்து நிலையம், ராஜப்பா பூங்கா, காமராஜர் மற்றும் சரபோஜி மார்க்கெட், அய்யன்குளம், சாமந்தன் குளம் உள்ளிட்ட 16 பணிகள் 2019ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே தஞ்சை அய்யன்குளம் மற்றும் சாமந்தன் குளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த நிலையில், தஞ்சை பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவையாறு பேருந்து நிலைய வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டது. ஏற்கனவே இங்கு உள்ள 96 கடைகளும் ஏலம் விடப்பட்ட நிலையில், பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி ஆணையர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பேருந்து நிலைய திறப்பு விழாவின் போது, திருநங்கைகள் திடீரென்று பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கம் கட்டியுள்ள 96 வணிக வளாகத்தில் தங்களுக்கும் கடைகளை ஒதுக்க வேண்டும். எங்களையும் சமமாக மதித்து இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தனியார் வணிக வளாகங்களில் கூடுதலாக வாடகை, முன்தொகை கேட்பதாகவும் அதேபோல் அரசு கட்டியுள்ள வணிக வளாகத்திலும் அதற்கு ஈடான வாடகையும், முன்தொகையும் கேட்டபதால், அதனை கட்ட முடியாது. எனவே எங்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்ற, திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அவர்கள் ஆணையரிடம் கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story
மனிதன் கனவு கண்ட காலத்தை இயந்திரம் உருவாக்கும் காட்சி – AIன் காலச்சுவடு!