தஞ்சை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பதவி ஒதுக்கீடு விவரம்

தஞ்சை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பதவி ஒதுக்கீடு விவரம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் எத்தனை பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது என்ற விவரம் வெளியாகி உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் அடுத்த மாதம் 19 ஆம் தேதி 459 கவுன்சிலர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகள் ஒதுக்கீடு விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் மாநகராட்சிகளுக்கும் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகளுக்கும் மற்றும் 20 பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

தஞ்சை மாநகராட்சி 51 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கும், கும்பகோணம் மாநகராட்சியில் 45 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

நகராட்சி-பேரூராட்சிகள்

பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு, அதிராம்பட்டினம் நகராட்சியில் 21 வார்டுகள் கவுன்சிலர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

பேரூராட்சி பகுதிகளான ஆடுதுறையில் 15 வார்டு, அம்மாபேட்டையில் 15 வார்டு, சோழபுரத்தில் 15-வார்டு, மதுக்கூரில் 15 வார்டு மேலத்திருப்பந்துருத்தியில்15-வார்டு, மெலட்டூரில் 15 வார்டு, ஒரத்தநாட்டில் 15 வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

பாபநாசத்தில் 15 வார்டு, பேராவூரணியில் 18 வார்டு, பெருமகளூரில் 12 வார்டு, சுவாமிமலையில் 15 வார்டு, திருக்காட்டுப்பள்ளியில் 15 வார்டு, திருநாகேஸ்வரத்தில் 15 வார்டு, திருப்பனந்தாளில் 15 வார்டு, திருப்புவனத்தில் 15 வார்டு, திருவையாறில் 15 வார்டு, திருவிடைமருதூரில் 15 வார்டு, வல்லத்தில் 15 வார்டு, வேப்பத்தூரில் 15 வார்டு கவுன்சிலர் பதவி இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

மாநகராட்சி கவுன்சிலர் பதவி இடங்கள் 99, நகராட்சி கவுன்சிலர் பதவி இடங்கள் 60, பேரூராட்சி கவுன்சிலர் பதவி இடங்கள் 300 என மொத்தம் 459 கவுன்சிலர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

தஞ்சை மாநகராட்சி

தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் 2 மற்றும் 7-வது வார்டு எஸ்.சி. பொதுவுக்கும், 6, 13, 21 ஆகிய வார்டுகள் எஸ்.சி. பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

3, 4, 5, 14, 15, 18, 22, 26, 27, 28, 29, 33, 35, 36, 37, 38, 39, 42, 43, 44, 48, 49, 50 ஆகிய 23 வார்டுகள் பெண்கள் பொதுப்பிரிவுக்கும், 1, 8, 9, 10, 11, 12, 16, 17, 19, 20, 23, 24, 25, 30, 31, 32, 34,40, 41, 45, 46 , 47, 51 ஆகியன பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

Tags

Next Story