பயிர் காப்பீடு வழங்காதததைக் கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு
விவசாயிகளுக்கு இதுவரை பயிர் காப்பீடு வழங்காதததை கண்டித்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியம், ஊரணிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைக்கு கீழ் 27 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட சங்கங்கள் மூலம் சம்பா சாகுபடி செய்வதற்கு விவசாயிகளுக்கு பயிர்கடன் இதுவரை வழங்கவில்லை, இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திட மேற்கண்ட கூட்டுறவு சங்கங்களில் கடன் கேட்டு உரிய ஆவணங்களுடன் ஆயிரக்கணக்கான விவசாயிகள் விண்ணப்பம் செய்துள்ளார்கள்.
ஆனால், சில கூட்டுறவு சங்கங்களை தவிர பல கூட்டுறவு சங்கங்கள் மூலம் இதுவரை பயிர் கடன் வழங்க வில்லை, கடன் கேட்டு விண்ணப்பித்த மூன்றுமாத காலமாகியும் இதுவரை பயிர் கடன் வழங்கவில்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரியிடம் மனு அளித்தும், நேரில் பார்த்து முறையிட்டும் கடன் வழங்கவில்லை என குற்றம்சாட்டி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். மேலும் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு தொகை வழங்கிடவும், விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் மற்றும் உரம் பூச்சி மருந்துகள் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் முன்பு விவசாயிகள் தரையில் அமர்ந்து முக்காடிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu