தஞ்சாவூரில் டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடி குறித்து ஆய்வு கூட்டம்

தஞ்சாவூரில் டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடி குறித்து ஆய்வு கூட்டம்
X

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி குறித்து வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி குறித்து ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. இதில் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார்.

தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடி குறித்த ஆய்வுக்கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதில் அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், இரண்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆய்வுக் கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறுகையில் டெல்ட்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி 3.50 லட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு,

தற்போது 1 லட்சத்து 48 ஆயிரம் ஏக்கர் நடவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி 1 லட்சத்து 5 ஆயிரம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 46 ஆயிரம் ஏக்கர் நடவு செதஞ்ய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil