தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தற்காலிக செவிலியர்கள் பணி நீட்டிப்பு மனு
தஞ்சாவூரில் பணி நீ்ட்டிப்பு கேட்டு செவிலியர்கள் மனு அளிக்க வந்தனர்.
தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய தற்காலிக செவிலியர்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சந்தித்து மனுவை அளித்தனர். அதில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் கடந்த 2021 ஏப்ரல் மாதம் பணியில் தற்காலிக செவிலியர்களாக சேர்க்கப்பட்டோம். தற்போது கொரோனாவின் தாக்கம் குறைவடைந்துள்ள நிலையில் தற்காலிக செவிலியர்களாக சேர்ந்தவர்களுக்கு எம்.எல்.ஹெச்.பி. வேலைக்கு முன்னுரிமை வழங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இதன்படி ஒரு சிலர் மட்டுமே அந்த பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள செவிலியர்கள் தொடர்ந்து கொரோனா மற்றும் பிற வார்டுகளிலும் தங்களது பணியினை தொடர்ந்து வந்தனர். கொரோனா தாக்கம் அதிகமாக இருந்த ஏப்ரல், மே, ஜூன் மாதத்தில் பணிபுரிந்த எங்களுக்கு தமிழக அரசு வழங்கிய ஊக்கத்தொகையும் கிடைக்கவில்லை. இந்நிலையில் 50க்கும் அதிகமான தற்காலிக செவிலியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளனர்.
கொரோனோ தடுப்பூசி வார்டு பணி, முகாம்கள் என இரவு பகல் பாராது தொடர்ந்து உழைத்து வந்ததால் தஞ்சை மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. இந்த போராட்டத்தில் எங்களால் காப்பாற்றப்பட்ட உயிர்களும் ஏராளம். ஆனால் இந்த காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக போராடிய எங்களது வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகி விட்டது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் சேவை புரிந்த எங்கள் வாழ்வில் தற்போது காரிருள் சூழ்ந்து உள்ளது. இதனால் அனைவரும் மிகவும் திணறி வருகின்றோம். எனவே எங்களுக்கு பணிநீட்டிப்பு செய்து தரவேண்டும் என அவர்கள் மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu