தஞ்சாவூரில் தடைசெய்யப்பட்ட 1700 கிலோ குட்கா பறிமுதல் : மூன்று பேர் கைது

தஞ்சாவூரில் தடைசெய்யப்பட்ட 1700 கிலோ குட்கா பறிமுதல் : மூன்று பேர் கைது
X

தஞ்சாவூரில் தடைச் செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 1700 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டையில் ADSP ஜெயசந்திரன் தலைமையில் தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த காவல்துறையினர் தஞ்சாவூரை சேர்ந்த ராஜ்குமார், அசோக் ராஜ், சேலத்தை சேர்ந்த ஆனந்த ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய DIG பிரவேஷ்குமார், தனிப்படை காவல்துறையினருக்கு கர்நாடகவில் இருந்து தஞ்சைக்கு குட்கா கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் கடந்த 15 நாட்களுக்காக தீவிர சோதனை ஈடுபட்டிருந்தோம்,

பறிமுதல் செய்யப்பட்ட லாரியில் 125 மூட்டைகளில் 1700 கிலோ குட்கா இருந்துள்ளது. இதன்மதிப்பு 75 லட்சம் என தெரிவித்தார். இதனையடுத்து குட்கா மற்றும் கண்டெய்னர் லாரியும், கடத்தலுக்கு பயன்படுத்திய மினி லோடு வேனையும் பறிமுதல் செய்துள்ளதாகவும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறாதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!