தஞ்சையில் லோடு வேன் மோதி சைக்கிளில் சென்ற முதியவர் பலி

தஞ்சையில் லோடு வேன் மோதி சைக்கிளில் சென்ற முதியவர் பலி
X
தஞ்சையில் லோடு வேன் மோதி சைக்கிளில் சென்ற முதியவர் உயிரிழந்தார்.

தஞ்சை அருகே விளார் சூரியன்பட்டிசாவடி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (73). இவர் கடந்த 23ம் தேதி தனது சைக்கிளில் தஞ்சையில் இருந்து மருங்குளம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியே நாஞ்சிக்கோட்டை முல்லை நகர் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (48) என்பவர் ஓட்டி வந்த லோடு வேன், சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராமலிங்கம், அந்த இடத்திலேயே இறந்து விட்டார்.

இதுகுறித்து ராமலிங்கத்தின் மனைவி பத்மாவதி வல்லம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story