அதிமுக, அமமுக, பாஜக, திமுக உள்ளிட்ட 8 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
தஞ்சை மாநகராட்சி அலுவலகம்
தஞ்சை மாநகராட்சி வார்டு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ததில் அ.தி.மு.க, அ.ம.மு.க, பா.ஜ.க, தி.மு.க உள்ளிட்ட 8 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. தஞ்சை மாநகராட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் பரிசீலனையில் 16 வது வார்டில் மனு தாக்கல் செய்திருந்த அ.தி.மு.க வேட்பாளர் புண்ணியமூர்த்தி மனு நிராகரிக்கப்பட்டது. இதை போல, 32 வது வார்டில் அ.ம.மு.க வேட்பாளர் செந்தில்குமார் மனுவும், 31 வது வார்டு அ.தி.மு.க வேட்பாளர் ரமேஷ் வேட்பு மனுவும், 27 வது வார்டு அ.தி.மு.க வேட்பாளர் தங்கம்மாள் வேட்புமனுவும், 20 வது வார்டு தி.மு.க வேட்பாளர் சாதிக்பாட்சா மனுவும், 46 வது வார்டு அ.தி.மு.க வேட்பாளர் சிவகுமார் வேட்புமனுவும்,19 வது வார்டு பா.ஜ.க முரளிதரன் மனுவும், 27 வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ராணி வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu