நவராத்திரி விழா எட்டாம் நாளில் பெரிய நாயகி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம்

நவராத்திரி விழா எட்டாம் நாளில் பெரிய நாயகி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம்
X

நவராத்திரி விழாவின் எட்டாம் நாளன்று பெரிய நாயகி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம்.

தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் நவராத்திரி பெருவிழாவில் அம்மனுக்கு தினமும் ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படும்

நவராத்திரி விழாவின் எட்டாம் நாளன்று பெரிய நாயகி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம். செய்யப்பட்டது.

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரியகோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் இராசராச சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் யுனொஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்திற்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இத்தகைய புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் அம்மனுக்கு தினமும் ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படும். அதேபோல் நிகழாண்டில் நவராத்திரி விழா கடந்த 6 -ஆம் தேதி சிறப்பு யாகத்துடன் தொடங்கியது. விழாவின் எட்டாம் நாளான நேற்று பெரியநாயகி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
ai and future cities