தஞ்சையில் போலி இரிடியம் விற்பனை செய்ய வந்தவர்கள் கைது

தஞ்சையில் போலி இரிடியம் விற்பனை செய்ய வந்தவர்கள் கைது
X

போலி இரிடியம் விற்க வந்த வாலிபர்கள் கைது

தஞ்சையில் போலி இரிடியம் விற்க வந்த கும்பல், கொள்ளை சதி திட்டம் தீட்டிய போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோயில் புறவழிச்சாலையில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையின் போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஐந்து இளைஞர்களை விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் இராமநாதபுரத்தை சேர்ந்த கணேசன் (34), முனீஸ்வரர் (31), முனீஸ்வரன் (33), தேனி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் (32), சின்னமுத்து (24) ஆகிய ஐந்து இளைஞர்களும் பித்தளை பாத்திரத்தை இரிடியம் என கூறி விற்பனை செய்வதற்காக தஞ்சை மாவட்டதிற்கு வந்துள்ளனர். ஆனால் தஞ்சையில் விற்பனை செய்வதற்கான தரகர்கள் கிடைக்காததால், அதனை விற்பனை செய்ய முடியவில்லை.

இதனையடுத்து கையில் பணம் இல்லாததால், அவர்களுக்கு சாப்பிடவதற்கும், தங்குவதற்கும் கையில் பணம் சிரமப்பட்டுள்ளனர். இதனால் வழிப்பறியில் ஈடுபட திட்டம் போட்டுள்ளனர். இதற்காக தஞ்சை மாரியம்மன் கோயில் புறவழிச்சாலையில் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்த போது காவல்துறையிடம் சிக்கியதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து பித்தளை அண்டா மற்றும் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!