சித்த வைத்தியத்தில் ஆர்வம் காட்டும் மக்கள்
நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் ஒரு நாள் தொற்று என்பது 30,000 கடந்து வருகிறது. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தொற்று எண்ணிக்கை 5,000மாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் வேகமெடுத்திருப்பதால், மக்கள் தங்களை காத்து கொள்ளவும், உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இயற்கை மருத்துவத்திற்கு திரும்பியுள்ளனர்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், சளி தொற்று ஏற்படாதுவாறு கசாயம் வைத்து குடித்து வருகின்றனர். இதனால் மூலப் பொருள்களை வாங்குவதற்கு நாட்டு மருந்து கடைகளில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
இது குறித்து நாட்டு மருந்து கடை உரிமையாளர்கள் ரவி கூறுகையில் கொரோனா நோய் வராமல் தங்களை பாதுகாக்க சித்த மருத்தவமே சிறந்தது என்று சுக்கு, திப்பிலி, அதிமதுரம் உள்ளிட்ட பொருள்களை மக்கள் அதிகளவில் வாங்கி செல்வதாகுவும்,
கடந்த காலங்களை விட 20% விற்பனை அதிகரித்து உள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும் மக்கள் வாங்க ஆர்வம் காட்டாத நாட்டு மருந்துகளை தற்போது கேட்டு வாங்கி செல்வதாகவும் கூறுகின்றனர். தமிழக அரசும் சித்த மருத்துவத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் வாசு என்பவர் கூறுகையில், கடந்த காலங்களில் காலை வேளைகளில் தேநீர் பருகி வந்த நாட்கள் போய், தற்போது இரு வேளைகளிலும் கசாயம், கபசுப குடிநீரை உள்ளிட்ட மூலிகை பானங்களை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பருகுவதாக கூறுகின்றனர்.
கொரோனா மூலம் நம் நாட்டு வைத்தியம் இளம் தலைமுறைகளிடம் தற்போது வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கூறுகின்றனர். கொரோனா வரும் முன் தம்மை பாதுகாத்து கொள்ள அனைவரும் நம் பாரம்பரியத்திற்கு திரும்பி இருப்தாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சித்த மருத்துவர் அருண்குமார் கூறுகையில் கொரோனா தொற்றால் பொதுமக்கள் சித்த வைத்தியம் தொடர்பாக அதிகளவில் ஆலோசனை கேட்பதாகவும், முன்பை விட தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu