தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகள் உருவ படத்திற்கு அ.தி.மு.க. மரியாதை

தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகள் உருவ படத்திற்கு அ.தி.மு.க. மரியாதை
X

தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகள் உருவ படத்திற்கு அ.தி.மு.க சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தஞ்சாவூரில் மொழிப்போர் தியாகிகள் உருவ படத்திற்கு அ.தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

மொழிப்போரில் தாளமுத்து நடராசன்,கீழப்பழுவூர் சின்னசாமி, கீரனூர் முத்து அரங்கநாதன், விராலிமலை சண்முகம், சாரங்கபாணி உள்ளிட்டோர் தங்களது இன்னுயிரை ஈந்தனர். இதனையடுத்து மொழிப்போர் தியாகிகள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25ந் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து தஞ்சாவூர் ரயிலடி பகுதியில் அலங்கரிக்கப்பட்ட தியாகிகளின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தலைமையில், மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் வீரவணக்க நாள் உறுதிமொழியும், மெளன அஞ்சலியும் செலுத்தினர். இதில் முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம், ஆவின் தலைவர் காந்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!