தஞ்சை அரசு மருத்துவமனையில் பணம் திருடியவர் கைது

தஞ்சை அரசு மருத்துவமனையில் பணம் திருடியவர் கைது
X
தஞ்சை அரசு மருத்துவமனையில் தூங்கிக் கொண்டு இருந்தவரிடம் இருந்து பணத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை அரசு மருத்துவமனையில் தூங்கிக் கொண்டு இருந்தவரிடம் இருந்து பணத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

ஒரத்தநாடு அருகே வடசேரியை சேர்ந்தவர் குமார் (47). இவர் தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் பார்வையாளர் இடத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு அய்யம்பேட்டை சீனிவாசன் நகரை சேர்ந்த அப்துல் கலாம் (44) என்பவர் வந்துள்ளார். அசந்து தூங்கிக் கொண்டிருந்த குமாரின் சட்டைப்பையில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடினார். இதுகுறித்து குமார் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்கு பதிவு செய்து அப்துல் கலாமை கைது செய்தார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!