தஞ்சை சரகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் மதுபான பாட்டில்கள் பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள்.
போலி மதுபானங்கள் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுஇருந்தார். இதன்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடந்து வந்தது.
இந்நிலையில் ஊரடங்கு மற்றும் பொங்கல் பண்டிகையின் போது விற்பனை செய்வதற்காக வெளிமாநிலங்களில் இருந்து போலி மதுபானங்களை தஞ்சை கொண்டு வந்து பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் மேற்பார்வையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், கண்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி மற்றும் இளையராஜா, விஜய், சுந்தர்ராமன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் 1600 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த பார் உரிமையாளர் கமல் உட்பட மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. போலி மதுபானங்கள் பதுக்கி வைத்திருந்த குடோனுக்கும் போலீசார் சீல் வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu