ஜூன் -12 மேட்டூர் அணை திறக்கப்படுமா, அரசு அறிவிக்க வேண்டும் : விவசாயிகள் எதிர்ப்பார்ப்பு

ஜூன் -12 மேட்டூர் அணை திறக்கப்படுமா, அரசு அறிவிக்க வேண்டும் : விவசாயிகள் எதிர்ப்பார்ப்பு
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிக்கு தயாராகும் விவசாயிகள் ( பைல் படம்)

குறுவை சாகுபடி பணிகளை தொடங்காமல் அரசின் உத்தரவுக்கு காத்திருக்கும் டெல்டா விவசாயிகள். ஜீன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுமா என்று தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறப்பு குறித்து இதுவரை தமிழக அரசு அறிவிக்கவில்லை,விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர்.

எனவே தமிழக அரசு உடனடியாக ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுமா இல்லையா என்பதை ஓரிரு நாட்களில் அறிவிக்க வேண்டும், அப்போதுதான் தாங்கள் விதை விட்டு நாற்று நடவுக்கு தயாராக முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில் தற்போது ஆழ்குழாய் பாசனத்தை நம்பி உள்ள விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான நாற்றங்கால் தயார் செய்யும் பணியை தொடங்கிவிட்டனர்.

ஆனால் ஆற்று பாசனத்தை நம்பி உள்ள விவசாயிகள் குழப்பத்தில் இருப்பதாக கூறுகின்றனர். ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்தால் விளைநிலங்களுக்கு வந்து சேர குறைந்தது 20 நாட்கள் ஆகும் என்பதால்,

தற்போதே விவசாயிகள் விதைவிட்டு நாற்று நட தயராக இருப்போம், ஒரு வேளை தமிழக அரசு அறிவிக்காமல் தண்ணீர் திறந்து விட்டால் டெல்டா விவசாயிகள் குறுவை பணிகளை தாமதமாக தொடங்கும் நிலை ஏற்படும்,

இதனால் தண்ணீர் வந்தும் பயன் இல்லாமல் போகும் என தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு உரிய முடிவை அறிவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் மாவட்டம் முழுவதும் உரம் மற்றும் விதை நெல் தட்டுப்பாடு அதிக அளவில் இருப்பதாகவும், தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
ai marketing future