மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை:தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை:தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
X
தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகள் மழை

தொடர் மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவிப்பு.

டெல்டா மாவட்டங்களில் மிக தீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி கல்லணை. திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படுதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!