மகா சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் நான்கு கால பூஜை

மகா சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் நான்கு கால பூஜை
X

தஞ்சை பெருவுரையார் கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி விழா

சிவராத்திரியை முன்னிட்டு தென்னக பண்பாட்டு மையம், ப்ரகன் நாட்டியாஞ்சலி சார்பில் இரவு முழுவதும் இசையஞ்சலி செலுத்தினர்

மகாசிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையாருக்கு நான்கு கால பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெறும். அதைப்போல் இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு பெருவுடையாருக்கு இரவு 10 மணி, 12 மணி, 2 மணி மற்றும் 4 மணி என நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. இதில் பெருவுடையாருக்கு மஞ்சள், சந்தனம், தயிர், பால், அரிசி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் சிவராத்திரியை முன்னிட்டு தென்னக பண்பாட்டு மையம் மற்றும் ப்ரகன் நாட்டியாஞ்சலி சார்பில் இரவு முழுவதும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நடன கலைஞர்கள் கலந்து கொண்டு இறைவனை இசையால் மகிழ்வித்தனர்.

Tags

Next Story