மழையால் பயிர் சேதம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையடுத்த சேர்மநல்லூர் பகுதியில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையடுத்த சேர்மநல்லூர் பகுதியில், பயிர் சேதம் குறித்து உள்துறை அமைச்சக இணை செயலாளர் ராஜீவ்சர்மா தலைமையில் வேளாண்மை - கூட்டுறவு விவசாயிகள் நலன்துறை இயக்குனர் விஜய்ராஜ்மோகன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக மண்டல அதிகாரி ராணஞ்சாய்சிங், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக சார்பு செயலாளர் எம்.வி.என்.வரபிரசாத் ஆகியோர் அடங்கிய குழுவினர்,பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிர்களை ஆய்வு செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டது அது குறித்த புகைப்படக் கண்காட்சியும் அங்கு இடம் பெற்றது.
அந்த பாதிப்புகள் குறித்து, மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எடுத்துரைத்தார். இந்நிலையில் பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை, பெயரளவிற்கு ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளனர். எதுவுமே தெரியாத,இரவில் வந்து என்ன ஆய்வு செய்தார்கள் என கேள்வி எழுப்பும் விவசாயிகள், கடந்த காலங்களில் கஜா புயல், நெல்லின் ஈரப்பதம் குறித்த ஆய்வு என பல்வேறு ஆய்வுகளுக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. எனவே அதுபோல் இல்லாமல் தமிழகத்திற்கு உடனடியாக மழை நிவாரண தொகையை வழங்க வேண்டும். மத்திய குழுவினரின் ஆய்வு திருப்திகரமாக இல்லை எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu