தஞ்சையில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி

தஞ்சையில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி
X
தஞ்சையில் மேலும் 3 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேலும் ஒரு பள்ளியில் ஒரு மாணவர், மூன்று ஆசிரியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கனவே 13 பள்ளிகளை சேர்ந்த 187 மாணவர்களும், 4 கல்லூரியை சேர்ந்த 38 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் ஒரு பள்ளியில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில்ஒரு தனியார் பள்ளியில் மூன்று ஆசிரியர்களுக்கும், ஒரு மாணவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளது.

Tags

Next Story
ai healthcare products