தஞ்சாவூரில் அமைச்சர் துரைமுருகனைக் கண்டித்து நடத்துனர், ஓட்டுனர்கள் போராட்டம்
அமைச்சர் துரைமுருகனைக்கண்டித்து தஞ்சையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள்
தஞ்சாவூரில் அமைச்சர் துரைமுருகனை கண்டித்து, பேருந்து பணிமனைகளில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துநர்கள் சுமார் 3 மணி நேரம் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், அரசு ஓட்டுனர்களை நடத்துநர்களையும் தரக்குறைவாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, தஞ்சை நகர்புறம் 1 மற்றும் 2 ஆகிய பணிகளில் உள்ள பேருந்துகளை இயக்காமல் ஓட்டுனர்களும் நடத்துனர்களும் பேருந்து பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் துரைமுருகன் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை ஈடுபட்டதை தொடர்ந்து சுமார் மூன்று மணி நேர கால தாமதத்திற்குப் பிறகு பணிமனையில் இருந்து பேருந்துகளை எடுத்துச் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu