தஞ்சை களிமேடு தேர் விபத்தை மகாமகத்தோடு ஒப்பிடுவதா? டி.டி.வி. தினகரன் கண்டனம்

தஞ்சை களிமேடு தேர் விபத்தை மகாமகத்தோடு ஒப்பிடுவதா? டி.டி.வி. தினகரன் கண்டனம்
X

தேர் விபத்து நடந்த இடத்தை டி டி வி  தினகரன் பார்வையிட்டார்.

தஞ்சை களிமேடு தேர் விபத்தை மகாமக விபத்தோடு ஒப்பிடுவதா? என டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்தார்.

தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் தேர் திருவிழாவின் போது தேரில் மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இள்ஞு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் பேசக்கூடாது. விபத்து நடந்து விட்டது, அதை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கிறோம் என்று தான் கூற வேண்டுமே தவிர, இது தனியார் கோயில் என்று கூறக்கூடாது. தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் தான் இந்த கோயில் உள்ளது. சிலோனில் இல்லை. அரசாங்கம் பொறுப்பேற்று அந்த அந்த விபத்திற்கான காரணத்தைச் சரி செய்யவேண்டும். இது போல் தமிழகத்தில் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விபத்தினை மகாமக விபத்தோடு ஒப்பிட்டு பேசி, அரசியல் ஆக்கினால் தவறாக முடியும் என்றார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!