மேட்டூர் அணையை திறக்க தமிழக அரசுக்கு வேளாண் வல்லுநர்கள் குழு பரிந்துரை
இந்த ஆண்டு காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்கலாம் எனவும், குறுவை, சம்பா பருவங்களில் அதிக அளவில் நேரடி நெல் விதைப்பு செய்திட விவசாயிகளுக்கு அறிவுரை வழங்க மூத்த வேளாண் வல்லுநர் குழு தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி மேட்டூர் அணைக்கு வரவேண்டிய நீரை உறுதியாக பெற்று தரவும் வலியுறுத்தியது.
தஞ்சையில் ஓய்வுபெற்ற வேளாண்துறை உயரதிகாரிகளை கொண்ட "மூத்த வேளாண் வல்லுநர் குழு" ஆண்டுதோறும் மேட்டூர் அணை திறக்க வேண்டிய காலம் , சிறப்பாக சாகுபடி செய்வது குறித்து பல்வேறு ஆலோசனைகளை அரசுக்கு வழங்குவது வழக்கம் .. அந்த வகையில் அந்த வகையில் 17ஆவது ஆண்டாக மூத்த வேளாண் வல்லுநர் குழு சார்பில் "பயிர் சாகுபடியும் நீர் வழங்கல் திட்டமும்" என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசுக்கும் வேளாண்மை துறை, நீர் பாசனத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தங்களுடைய பரிந்துரைகளை அளிக்கும் புத்தகத்தை இக்குழுவை சேர்ந்த முன்னாள் வேளாண்மை உதவி இயக்குனர் கலைவாணன், முன்னாள் வேளாண்மை இணை இயக்குனர் கலியமூர்த்தி உள்ளிட்டோர் இன்று வெளியிட்டனர்.
இது குறித்து பேட்டி அளித்த இக்குழுவை சேர்ந்த கலைவாணன் கூறியதாவது:
நடப்பாண்டில் காவிரி டெல்டா பாசனத்திற்க்காக இயல்பாக திறக்க வேண்டிய ஜூன் 12ஆம் தேதி அணையை திறக்கலாம் என அரசுக்கு பரிந்துரைப்பதாகவும், நீர் தேவையை குறைத்திட, நிலத்தடி நீர் உள்ள இடங்களில் குறுவை பருவத்தில் நாற்று விட்டு நடவினை முடித்திடவும், விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கிடவும், தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்வதாகவும், குறுவை, சம்பா பருவங்களில் அதிக அளவில் நேரடி நெல் விதைப்பு செய்திட விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கவும் மாநில அரசை கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்... வடகிழக்கு பருவமழையால் பயிர் சேதம் இல்லாமல் இருக்க குறுகிய கால இரகங்கள் மே முதல் ஜூன் முடிய விதைப்பு செய்திடவும், நீண்டகால ரகங்கள் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 7 வரையும், மத்திய கால இரகங்கள் செப்டம்பர் மாதம் முழுவதும் விதைப்பு செய்திட வேண்டுமென தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தவர், விவசாயிகள் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளும் வகையில், மேட்டூர் அணை திறப்பை 15 நாட்களுக்கு முன்பாகவும், மூடும் காலத்தை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் எனவும் அரசை கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu