அதிராம்பட்டினம் அருகே மீனவர் வலையில் சிக்கியது கஞ்சா மூட்டைகள்
மீனவர் வலையில் சிக்கிய கஞ்சா மூட்டைகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே ஏரிப்புறக்கரையை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் இன்று காலை வழக்கம் போல் தன்னுடைய படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார். அப்போது மீன் வலையில் ஐந்து மூட்டைகள் சிக்கியது. இதைக்கண்ட மீனவர் சோமசுந்தரம் சந்தேகமடைந்து அதிராம்பட்டினம் கடலோர காவல் படை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ஐந்து மூட்டைகளையும் கைப்பற்றி பரிசோதனை செய்தபோது, அதில் 150 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து யார் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu