வ.உ.சி. பிறந்தநாள்: தஞ்சையில் வ.உ.சி. குறித்து மூன்று நூல்கள் வெளியீடு

வ.உ.சி 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சையில் வெளியிடப்பட்ட வஉசி குறித்து மூன்று நூல்கள்
வ.உ.சி 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சையில் வஉசி குறித்து மூன்று நூல்கள் வெளியிடப்பட்டது.
சென்னை வ.உ.சி ஆய்வு வட்டம் மற்றும் தஞ்சை பெரிய கோயில் வார வழிபாட்டு மன்றம் சார்பாக வ.உ.சி 150-ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா தஞ்சை தனியார் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இதில், தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், குருசாமி மயில்வாகனன் எழுதிய "கப்பலோட்டிய கதை" என்ற நூலும், கதிர்நம்பி எழுதிய "சிதம்பர வேங்கை" மற்றும் "ஆராலும் என்னை அமட்ட ஒண்ணாது" ஆகிய 3 நூல்கள் வெளியிடப்பட்டன. நிகழ்வில் பல்வேறு தமிழ் ஆர்வலர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.
.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu