தஞ்சை அருகே வல்லத்தில் குடிபோதையில் 3 பேரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

X
By - Aaruthran, Reporter |11 March 2022 11:30 AM
தஞ்சை அருகில் வல்லத்தில் குடிபோதையில் மூன்று பேரை தாக்கியதாக, வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தஞ்சை அருகே வல்லம் பெரியார் நகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சகாயராணி. மகன் திருத்துவராஜ் (28). அதே பகுதியை சேர்ந்தவர் லூயிஸ் மகன் ஆரோக்கியராஜ். கடந்த 10ம் தேதி அதே தெருவை சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவரின் மகன் கிஷான் (26) குடிபோதையில் திருத்துவராஜ் உட்பட மூன்று பேரையும் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த திருத்துவராஜ், சகாயராணி, ஆரோக்கியராஜ் மூவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் வல்லம் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். .
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu