புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
X
தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராஜு தலைமையிலான போலீசார் ஜெய்சங்கரின் வீட்டில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏழு மணி நேரத்திற்கு மேலாக சோதனை செய்தனர்.

தஞ்சாவூர், மருத்துவ கல்லூரி சாலை பகுதியை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவர், புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஜெய்சங்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராஜு தலைமையிலான போலீசார், ஜெய்சங்கரின் வீட்டில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின்போது தங்கம், ரொக்க பணம், பல்வேறு ஆவணங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு, தொடர்ந்து ஜெய்சங்கர் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணை பிற்பகல் மூன்று மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு மேலேயும் நடைபெற்று வருகிறது.

Tags

Next Story