தஞ்சாவூர் மாநகராட்சியின் முதல் பெண் துணை மேயர் அஞ்சுகம்பூபதி

தஞ்சாவூர் மாநகராட்சியின் முதல் பெண் துணை மேயர் அஞ்சுகம்பூபதி
X

தஞ்சை துணை மேயர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள முதல் பெண் வேட்பாளர் அஞ்சுகம் பூபதி

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு தலைவர் பதவிக்கு சண்.ராமநாதனும் துணை மேயராக துணை மேயராக அஞ்சுகம்பூபதியும் அறிவிக்கப்பட்டுள்ளனர்

தஞ்சாவூர் மாநகராட்சியின் முதல் திமுக துணை மேயர் அஞ்சுகம்பூபதி.

நடந்து முடிந்துள்ள உள்ளாட்சி நகர்மன்ற சாதாரண தேர்தலில் தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில், 42 வார்டுகளை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றியது. மேலும் 7 வார்டுகளை அதிமுகவும், 1 வார்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், ஒரு வார்டில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து யார் துணை மேயர் என எதிர்பார்ப்பு தஞ்சை மக்களிடமும், கட்சி நிர்வாகிகளிடம் அதிகரித்தது.

இந்நிலையில் இன்று மேயர் மற்றும் துணை மேயர் பட்டியலை திமுக கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மேயர் பதவிக்கு சண்.ராமநாதனும், 51வது வார்டில் வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த அஞ்சுகம் பூபதி துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் முதல்முறையாக வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் தற்போது 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எதிர்க்கட்சிகள் அனைவரும் டெபாசிட்டை இழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திமுக மாவட்ட மருத்துவரணி அமைப்பாளராக உள்ளார். இதே போல கும்பகோணம் மாநகராட்சியின் மேயர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சரவணனும், துணை மேயர் பதவிக்கு திமுவைச் சேர்ந்த தமிழழகன் ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.


Tags

Next Story
ai ethics in healthcare