234 தொகுதிகளும் அ.தி.மு.கவுக்கே : வைத்தியலிங்கம்

234 தொகுதிகளும்  அ.தி.மு.கவுக்கே  : வைத்தியலிங்கம்
X
234 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கூறினார்.

234 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தஞ்சையில் கூறினார்.

தஞ்சை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் அறிவுடைநம்பி மற்றும் ஒரத்தநாடு அ.தி.மு.க வேட்பாளர் வைத்தியலிங்கம் ஆகியோர் தஞ்சை ரயில் நிலையம் எதிரே உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலிதா சிலைக்கு மாலை அணிவித்து தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பிரகாசமாக உள்ளது. அ.தி.மு.க அறிவித்துள்ள திட்டங்களை தான் தி.மு.க அறிவித்து வருகிறது என்றும் டெல்டாவை சேர்ந்த விவசாயிகளுக்கு அதிக அளவில் திட்டங்களை கொடுத்துள்ளதாகவும் மேலும் சிறப்பான திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story