மஜக நிர்வாகி கொலை வழக்கில் 6 பேர் தஞ்சை நீதிமன்றத்தில் சரண்

மஜக நிர்வாகி கொலை வழக்கில் 6 பேர் தஞ்சை நீதிமன்றத்தில் சரண்
X

சரணடைந்த 6 பேர். 

வாணியம்பாடி மஜக நிர்வாகியும், சமூக ஆர்வலருமான வாசீம் அக்ரம் கொலை வழக்கில் 6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் கடந்த 10-ஆம் தேதி மாலை அதே பகுதியை சேர்ந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் நிர்வாகியும், சமூக ஆர்வலருமான வாசீம் அக்ரம் கொலை வழக்கில் வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி பாபு தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார், அகஸ்டின், பிரவின்குமார், சத்யா என்கின்ற சத்தியசீலன் முனீஸ்வரன், அஜய் உள்ளிட்ட 6 பேர் தஞ்சாவூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் - 3ல் நீதிபதி பாரதி முன்பு சரணடைந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!