6 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம்: விவசாயிகள் புகார்

6 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம்: விவசாயிகள் புகார்
X
24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு வெறும் 6 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் கிடைப்பதாக தஞ்சை விவசாயிகள் புகார் எழுப்பியுள்ளனர்.

தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விவசாயிகள் தமிழக அரசு விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் மட்டுமே தள்ளுபடி செய்துள்ளதாகவும், விவசாயிகள் வாங்கிய நகை கடன் உள்ளிட்ட அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். தமிழக அரசு விவசாய பம்பு செட்டுகளுக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. ஆனால் வெறும் 6 மணிநேரம்கூட மும்முனை மின்சாரம் கிடைக்கவில்லை எனவும் அந்த அறிவிப்பும் வெற்று அறிவிப்பாக இருப்பதாக வேதனை தெரிவித்தனர்.

Tags

Next Story
ai solutions for small business