தஞ்சை மாவட்டத்தில் தயார் நிலையில் 438 பள்ளிகள்; முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

பள்ளியில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவத்தொடங்கியதையடுத்து பள்ளிகள் மூடப்பட்டன. பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இரண்டாவது அலை வேகமாக பரவ தொடங்கியது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் அதிகப்படியாக மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது. இந்த ஆண்டிற்கான கல்லூரி பருவம் ஜூன் மாதம் தொடங்கியதையடுத்து பள்ளிகள் திறக்கபடாமலேயே ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. படிப்படியாக தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், நாளை முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் வகுப்பறைகளில் 50 சதவீத மாணவர்களுடன் நடைபெறுமென தமிழக அரசு அறிவித்தது.
மேலும் ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி கண்டிப்பாக செலுத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை பள்ளிகள் திறக்கப்பவுள்ளதையடுத்து அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள 227 அரசு பள்ளிகள் 62 அரசு உதவி பெறும் பள்ளிகள், 97 மெட்ரிக் பள்ளிகள், 24 சுயநிதி பள்ளிகள், 28 சிபிஎஸ்இ பள்ளிகள் என 438 பள்ளிகளில் முன்னேறுப்பாடுகள் பணி நடைபெற்று வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளில் ஒரு லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் உள்ளனர். இந்நிலையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யக்கூடிய பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பள்ளிகளுக்கு வரக்கூடிய மாணவர்கள் ஆசிரியர்கள் கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து வரவேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் வெப்பமானி ஆக்சிஜன் அளவு அறியக்கூடிய கருவி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu