பட்டுக்காேட்டை அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.1.90 லட்சம் பறிமுதல்

பட்டுக்காேட்டை அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.1.90 லட்சம் பறிமுதல்
X

சிவக்கொல்லை பகுதியில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில், நகராட்சிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு அதிகாரிகளின் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பணப்பட்டுவாடா தவிர்க்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பட்டுக்கோட்டை நகராட்சி சிவக்கொல்லை பகுதியில் தேர்தல் அதிகாரி சாந்தகுமார் தலைமையில் தேர்தல் அலுவலர்கள் ஆய்வு பணி மேற்கொண்ட பொழுது மீன் ஏற்றும் வண்டியில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக டெம்போ ஓட்டுனர் வாசிம் அக்ரமிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது எந்தவித ஆவணங்களும் இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து ரூபாய் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story