தண்ணீரை அடைத்து பாலம் கட்டுவதால் -விவசாயிகள் பாதிப்பு
ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி கீழையூர் கேகே 3 நம்பர் வாய்க்கால் கேனிபாலத்தை உடைத்து வாய்க்காலை அகலப்படுத்தும் பணியில் பொதுப்பணி துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கோடை காலத்தில் செய்ய வேண்டிய கேனி பாலம் கட்டுமான பணியை துவக்கி இருக்க வேண்டும்.
அதை விட்டுவிட்டு, தற்போது குறுவை சாகுபடிக்காக கல்லணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை தேக்கி வைப்பதால், கடைமடை பகுதிவரை செல்ல வேண்டிய தண்ணீர் சென்று அடையாததால், இதன் மூலம் 500 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப் படவேண்டிய குறுவை சாகுபடி தண்ணீரி ன்றிி, விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் உள்ள கேனி பாலத்தை கட்டி முடிப்பதற்கு ஒரு மாதகாலமாககும் என பணியிலிருக்கும் ஊழியர்கள் தெரிவித்தனர். எனவே விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி தவிக்கும் விவசாயிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட கலெக்டருக்கு இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி கீழையூர் கேனி பாலம் உடைத்து தூர்வாரும் பணியில் பொதுப்பணி துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu