மகளிர் தினத்தன்று மாதர்சங்கம் ஆர்ப்பாட்டம்

மகளிர் தினத்தன்று மாதர்சங்கம் ஆர்ப்பாட்டம்
X

தஞ்சாவூரில் மகளிர்தினத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பெண்களை இழிவுபடுத்தி பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டேவை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் புகாரை கொடுக்கவிடாமல் தடுத்த எஸ்பி.,கண்ணன் ஆகியோரை பணியிலிருந்து நீக்கம் செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்த கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தஞ்சாவூர் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!